உளுந்தூர்பேட்டை | டிசம்பர் 27
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.குன்னத்தூர் ஊராட்சியில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவருமான ஏ.ஜே. மணிக்கண்ணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் நலம் விசாரித்து வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் கிராமப்புற பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரும் உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பாலசிங்கம், மனோகர், வெங்கடேஷ் உள்ளிட்டோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமின் சிறப்பை அதிகரித்தனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள், கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதாக கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment